மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மோகா தோட்டப் பகுதியில் அனுமதியின்றி இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் இருவர்
கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஸ்கெலியா பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே
அவர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரத்தினக் கல் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட கருவிகளையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
மஸ்கெலியாவை சேர்ந்த 27 மற்றும் 37 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







