தீர்வை வரி குறித்து ஜனாதிபதி – அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலகத்தின் தூதுவர் இடையே கலந்துரையாடல்

54
0
Spread the love

 

தீர்வை வரிக் குறைப்பு தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலகத்தின் தூதுவர் ஜேமிசன் கிரியருக்கும் இடையே இணையவழி கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கை ஏற்றுமதிக்கு அமெரிக்கா விதித்துள்ள தீர்வை வரிகளை குறைப்பது தொடர்பில் நேற்று (25.07) பிற்பகல் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள தீர்வை வரிகளை குறைப்பது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்துவது, இந்தக் கலந்துரையாடலின் முதன்மை நோக்கமாகும்.

இந்த இணையவழி கலந்துரையாடலில் நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலக அதிகாரிகளும் கலந்துகொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here