தமிழகத்தின் புதுச்சேரியில் போதைப்பொருளுடன் இலங்கையர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் பயன்பாட்டிலிருந்து காரைக்காலை விடுவிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒபரேசன் விடியல் என்ற நடவடிக்கையின் போதே இலங்கையர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காரைக்காலில் அதிகாரிகள், இரண்டு இலங்கையர்கள் உட்பட ஐவரை கைது செய்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
300 கிலோ கிராமுக்கும் அதிகமான கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையைச் சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.







