ஹோமாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நபரொருவர் மீது தாக்குதல் மேற்கொண்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்
நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாதம்பிட்டிய மற்றும் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுகளில் நேற்றிரவு மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போதே
குற்றப் புலனாய்வு அதிகாரிகள் சந்தேகசபர்களை கைது செய்துள்ளனர்.
கைதானவர்கள் கொழும்பு 14 மற்றும் 15 ஐ சேர்ந்த 18 மற்றும் 24 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 10 ஆம் திகதி நபரொருவரை கொலை செய்த பின்னர் அவர்கள் பயணித்த கார் கேகாலை-மாவனெல்ல வீதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கமைய கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை அடையாளம் காண பொலிஸார் நீண்ட விசாரணை மேற்கொண்டனர்,







