தெற்கு அதிவேக வீதியில் வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
அதிவேக வீதியின் அங்குணுகொலபெலஸ்ஸ பகுதியில் இந்த விபத்து நேற்றிரவு (27.07) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது காயமடைந்த நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேன் ஒன்றின் டயர் வெடித்ததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் 72 மற்றும் 44 வயதுடைய இரண்டு பெண்களே உயிரிழந்துள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.







