நாடளாவிய ரீதியில் ரயில் சாரதிகள் நாளை (20.07) நள்ளிரவு முதல் 48 மணி நேர பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில் இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சமிஞ்சை அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நாடு முழுவதும் ரயில் சேவைகள் பாதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.







