நாட்டின் பல பகுதிகளில் இன்று (30.07) வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகளில் வெப்பக் குறியீடு, அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை, கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.







