ரஷ்யாவை உலுக்கிய சுனாமி

49
0
Spread the love

சுனாமி எச்சரிக்கை காரணமாக ஜப்பான், ஹவாய் மற்றும் அமெரிக்காவின் மேற்கு கடற்கரையின் சில பகுதிகளில் மக்களை வெளியேற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ரஷ்யாவின் கம்சட்காவின் சில பகுதிகளில் 03 முதல் 04 மீற்றர் உயரம் வரை சுனாமி ஏற்பட்டுள்ளது.

கம்சட்கா தீபகற்பத்தில் இன்று (30.07) காலை 8.0 ரிக்டர் அளவில் சக்கி வாய்ந்த நில அதிர்வு பதிவானதை தொடர்ந்து ஜப்பான் மற்றும் அமெரிக்க உள்ளிட்ட பசுபிக் நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தற்போது ஏற்பட்டுள்ள சுனாமி காரணமாக ரஷ்யாவின் தொலைதூர பிராந்தியத்தில் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் பல கட்டிடங்கள் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here