மன்னாரில் குடும்பஸ்தர் மாயம்

117
0
Spread the love

முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழ்க்கைப் பெற்றான் கண்டல் கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக முருங்கன் பொலிஸ் நிலையத்தில் இன்றையதினம் (16.04 ) வியாழக்கிழமை முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாழ்க்கைப் பெற்றான் கண்டல் பகுதியைச் சேர்ந்த, “சிறில்” என அழைக்கப்படும் அந்தோணி றெமி (48) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே நேற்று (15) காலை வீட்டிலிருந்து வெளியேறியதிலிருந்து இதுவரை வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் காணாமல் போனது தொடர்பில் அவரது சகோதரியினால் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவரைப் பற்றிய தகவல்
தெரிந்தவர்கள் முருங்கன் பொலிஸ் நிலையத்தையோ அல்லது கீழ்க்காணும் இலக்கத்துடனோ
தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது :077 069 9042

குறித்த நபர் தொடர்பான விசாரணைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here