நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்து – மூவர் உயிரிழப்பு

61
0
Spread the love

 

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் ஒன்றரை வயது குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

மாத்தளை, மதவாச்சி மற்றும் கட்டான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இந்த விபத்துக்கள் நேற்று இடம்பெற்றுள்ளன.

மாத்தளை-ரத்தோட்ட வீதியில்; முச்சக்கர வண்டி சாரதி வேகக்கட்கடுப்பாட்டை இழந்ததால் விபத்து இடம்பெற்றுள்ளது.

முச்சக்கர வண்டியின் பின் இருக்கையில் பயணித்த சாரதியின் தாயும் குழந்தையும் விபத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன்போது குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தெரிவக்கப்படுகிறது.

இதனிடையே, மதவாச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யு09 வீதியில் உள்ள வெலிஓயா சந்திப்பில், லொறி சாரதியும் வேக கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மற்றும் மற்றொரு லொறியுடன் மோதியது.

விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மதவாச்சி பகுதியைச் சேர்ந்த 58 வயதுடையவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்

இதேவேளை, கட்டான பொலிஸ் பிரிவில் நீர்கொழும்பு – மீரிகம வீதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளொன்று கெப் ரக வாகனமொன்றுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழந்துள்ளார்.

கட்டான பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here