இலங்கையின் வெலிகம பகுதியில் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த 21 வயதுடைய துனிசிய நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை (08) வெலிகம, பரண கடே கடற்கரைப் பகுதியில் துனிசிய நண்பர்கள் குழுவுடன் அலைச்சறுக்கில் ஈடுபட்டிருந்தபோது, பலத்த காற்று மற்றும் கடலின் வலுவான நீரோட்டத்தில் சிக்கிய நிலையில் அவர் காணாமல் போயுள்ளார்.
இதையடுத்து, பொலிசார் மற்றும் உயிர்காப்பாளர்கள்,இணைந்து நடவடிக்கையில் ஈடுபட்டனர். எனினும், அன்றைய தினம் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை (09) காலை அதே கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கிய நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்







