மன்னாரில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட 16 வயது சிறுவன் கைது

32
0
Spread the love

மன்னாரில் பதிவு செய்யப்படாத ட்ரோன் ஒன்றை அனுமதியின்றி
பறக்கவிட்டதாகக் கூறப்படும் 16 வயது சிறுவன் ஒருவர் இன்று (09) கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னாரில் உள்ள விமானப்படை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மன்னார் பொலிஸ் பிரிவு புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின்போதே சவுத்பார் பனங்கட்டுக்கொட்டு பகுதியில் குறித்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பதிவு செய்யப்படாத நிலையில் ட்ரோன் பறக்கவிடப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுவன் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து DJI Mini 4 Pro ரகத்தைச் சேர்ந்த ஒரு ட்ரோன் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here