கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் பலி

65
0
Spread the love

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தொன்றில் இன்று (31.07) பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.

கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவரை பின்னால் வந்த டிப்பர் முந்திச்செல்ல முற்பட்ட வேளையே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து இடம்பெற்ற இடத்தில் விபத்தை ஏற்படுத்திய சாரதி பொதுமக்களால் தாக்கப்பட்டார்.

இதனால் சற்று பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here