கொஸ்கொட, பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (31.07) காலை இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வருகைத்தந்த இருவரினால் குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் 23 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவத்திற்கு T56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.







