முன்னாள் ஜனாதிபதிகள் உரிமைகள் சட்டத்தை ரத்து செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட நாளில் இருந்து பின்வரும் உரிமைகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகளை ரத்து செய்யும் வகையில், ஜனாதிபதியின் உரிமைகள் சட்டத்தை ரத்து செய்வதற்கான சட்டமூலத்திற்கு அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.







