பொலிஸ் சேவையில் 1000 பெண் உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை

58
0
Spread the love

பொலிஸ் சேவையில் 1000 பெண் உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரத்தில் வெளியிடப்படும் என அமைச்சர் ஆனந்த வி​ஜேபால தெரிவித்தார்.

அத்துடன் 5000 பொலிஸ் உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகப்பரீட்சைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

பொலிஸ் சேவையில் நிலவும் 10000 வெற்றிடங்களை நிரப்பும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here