நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடமத்திய, ஊவா, கிழக்கு, மத்திய, மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், குருநாகல், வவுனியா, முல்லைத்தீவு, மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இவ்வாறு மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணம் மற்றும் காலி, மாத்தறை, புத்தளம் மாவட்டங்களிலும் மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.







