யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்ற பொளத்த பிக்கு ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் நேற்றிரவு உறக்கத்துக்கு சென்ற நிலையில் இன்று காலை (02.08)சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுளை – பசறை பகுதியைச் சேர்ந்த பொளத்த பிக்குவே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்துக்குக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







