மட்டக்களப்பில் யானை தாக்குதலுக்கு இலக்கான நபர் பலி

69
0
Spread the love

 

மட்டக்களப்பு, வெல்லாவெளி பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கூழாவடி நெல்லிக்காட்டில் இன்று (02.08) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நெல்லிக்காட்டு கிராமத்திற்குள் நேற்றிரவு யானை நுழைந்ததாகவும் இதன்போது வீட்டின் முன்பகுதியில் குறித்த நபர் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 04 பிள்ளைகளின் தந்தையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வெல்லாவெளி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here