பல இலட்சம் ரூபா பெறுமதியான போதைப் பொருள் பறிமுதல்

80
0
Spread the love
தெபுவன, ஹொரண, மதுகம மற்றும் அங்குருவாத்தோட்டை பகுதிகளில் ஈஸி கேஷ் முறையைப் பயன்படுத்தி ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட ‘தெபுவன பிந்து’ உள்ளிட்ட மூவர் தெபுவன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் தெபுவன பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் சேனாதிரக தர்ஷனவின் அறிவுறுத்தலின் பேரில் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தெல்கொட விகாரைக்கு அருகில் 15 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய தெல்கொட விகாரைக்கு அருகில் வைத்து  தெபுவன பிந்து 15 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பாக மதுகம நீதவான் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீதவானின் உத்தரவின்படி, ‘தெபுவன பிந்து’வை ஏழு நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க தெபுவன பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
விசாரணையைத் தொடர்ந்து, தெபுவனவின் கிரிமெட்டிய பகுதியில் உள்ள ஆளில்லாத வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ஐந்து மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 310 கிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here