கிளிநொச்சி – ஏ9 பிரதான வீதியின் தொண்டமானகர் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு பாரவூர்திகள் மோதிக்கொண்டதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
முன்னால் சென்ற பாரவூர்தி வீதியில் நிறுத்தப்பட்டு பொருட்களை இறக்கிக்கொண்டிருந்த நிலையில், பின்னால் அதே திசையில் வந்த மற்றொரு பாரவூர்தி அதன்மீது மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் பாரவூர்தியின் உதவியாளராகப் பணியாற்றிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சத்தியராசா சஞ்சயன் (21) என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.
மேலும், 28 வயதுடைய பாரவூர்தி சாரதி படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.







