கடந்த மே மாதம் 23 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார திருத்தச் சட்டமூலம் இன்று (06.08) நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை, கடந்த பெப்ரவரி மாதம் 09 ஆம் திகதி ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தியது.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று (06.08) இந்த கூட்டம் நடைபெற்றது.







