மன்னாரில் “கருநிலம் ” மக்கள் விழிப்புணர்வுப் போராட்டம்(video)

125
0
Spread the love

இலங்கை சுற்றுச்சூழலுக்கான வலையமைப்பின் இளையோர்களின் ஏற்பாட்டில் "கருநிலம் " மக்கள் விழிப்புணர்வு போராட்டம் மன்னார் பஜார் பகுதியில் இன்றை தினம்(06.08) புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

"மன்னாரில் கனிய மண்ணகழ்வுக்கு வழங்கப்பட்ட வழங்கப்படவிருக்கிற அனுமதியை ரத்து செய்ய வேண்டும்" "மன்னார் தீவு பாதுகாக்கப்பட்ட கடலோரம் மற்றும் சூழல் தொகுதியாக அங்கீகரிக்கப்பட வேண்டும்" "சுற்றுச்சூழல் தொடர்பான செயற்பாடுகள் மக்களின் கருத்துக்களுடன் வெளிப்படைத் தன்மையுடன் இடம்பெறவேண்டும்" என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து குறித்த மக்கள் விழிப்புணர்வுப் போராட்டமானது இன்றைய தினம் மன்னார் இளையோர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்தில், மன்னார் மாவட்டத்தில் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அபிவிருத்தி திட்டங்களை நிறுத்த கோரி ஜனாதிபதிக்கு அஞ்சலட்டைகள் மூலம் அனுப்பி வைப்பதற்கான கையெழுத்து வேட்டையும் நடைபெற்று வருகின்றது.

குறித்த மக்கள் விழிப்புணர்வுப் போராட்டத்தில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் உட்பட தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள்,மற்றும் அருட்பணியாளர்கள்,நகர சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த "கருநிலம்" விழிப்புணர்வு போராட்டம் நாளைய தினமும் (06.08) நடைபெற உள்ள நிலையில் இன்றைய தினம் போராட்டக்காரர்கள் மன்னார் பஜார் பகுதியில் சுற்றுவட்டத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஊர்வலம் ஒன்றை ஆரம்பித்து மன்னார் மாவட்ட வைத்தியசாலை வீதி ஊடாக பயணித்து பின்னர் மீண்டும் மன்னார் சுற்றுவட்டத்தை வந்தடைந்த பின்னர் அங்கே மக்களிடம் கையெழுத்துப் பெறும் நிகழ்வு நடைபெற்று வருகின்றது. மேலும் நாளைய தினமும் குறித்த போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மக்களுக்கு போராட்டக்காரர்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.