அரச நிறுவனங்களில் நீண்டகாலமாக நிலவும் வாகனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, 2,000 கெப்ரக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சகம் அறிவித்துள்ளது.
சில அரசத் துறைகளுக்கு சுமார் 15 ஆண்டுகளாக புதிய வாகனங்கள் கிடைக்கவில்லை என்றும், இதன் விளைவாக அதிகாரிகள், குறிப்பாக களப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.
பொதுத்துறை நிறுவனங்கள் எதிர்கொள்ளும் தளவாட சவால்களை முழுமையாக மீளாய்வு செய்த பின்னர், ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களுக்கமைய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
இந்நிலையில் பிரதேச செயலகங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன மேலும் தெரிவித்தார்.







