மலேரியா தொற்றால் யாழில் ஒருவர் உயிரிழப்பு

66
0
Spread the love

 

மலேரியா தொற்று காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒருவர் உயிரிழந்ததாக, யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நெடுந்தீவைச் சேர்ந்த 34 வயதுடைய நபர், கடந்த வாரம், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் அனுமதிக்கப் பெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர் கொங்கோ நாட்டிலிருந்து நாடு திரும்பியிருந்தார்.

இவருக்கு, கடந்த ஆறு நாட்களாக யாழ் போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டது.

இந்த நிலையில் கடுமையான தொற்று மற்றும் பல்வேறு உடல் அங்கங்களின் செயற்பாட்டு இழப்பால் நேற்றைய தினம் (09.08) அவர் உயிரிழந்துள்ளார்.

மருத்துவப் பரிசோதனைகளில் அவர் மலேரியா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here