நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 14 ஆம் நாள் திருவிழா (11.08) இன்றாகும்.
நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் கடந்த 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 13ஆம் திருவிழா நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (10.08) இடம்பெற்றது.
13ஆம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருகப் பெருமான்,வள்ளி தெய்வானை ஆகியோர் இடப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தனர்.
25 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்று சப்பரம், தேர் மற்றும் தீர்த்த திருவிழாக்களுடன் நல்லூர் கந்தனின் உற்சவம் இனிதே நிறைவுறும்.








