பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் முல்லைத்தீவு இளைஞனின் உடல் நல்லடக்கம்

83
0
Spread the love

முல்லைத்தீவு – முத்தையன்கட்டில் படுகொலை செய்யப்பட்ட இளைஞனின் இறுதி ஊர்வலம் பொலிஸ் பாதுகாப்புடன் இடம்பெற்றது.

இதன்போது, பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர்

முத்தையன்கட்டுகுளம்- இடதுகரை இராணுவ முகாமிற்கு வரவழைக்கப்பட்டு தாக்குதல் நடத்தியபோது தப்பிச்செல்ல முற்பட்டு குளத்தில் குதித்ததாக
கூறப்படும் இளைஞன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அவரது பூதவுடல் இன்றையதினம் (11.08) நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்தநிலையில்,பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிற்கு வருமாறு கடந்த 07 ஆம் திகதி அழைப்பு ஏற்படுத்தப்பட்டதையடுத்து
ஐவர் முகாமிற்கு சென்ற நிலையில் இராணுவத்தினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here