மன்னார் பஜார் பகுதியில் நள்ளிரவில் பெரும் பதற்றம்

81
0
Spread the love

பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்புடன் மன்னாரில் இரண்டாம் கட்ட காற்றாலை மின் திட்டத்திற்கான காற்றாலை கோபுரங்கள் அமைப்பதற்கான பெருமளவு பொருட்கள் ஏற்றி வரப்பட்ட போது மக்களின் எதிர்ப்பால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது குறித்த வாகனம் மன்னார் நீதி மன்ற பிரதான வீதியில் பொலிஸ் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது.

மக்கள் பொது அமைப்பினர் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், உள்ளடங்களாக பொது மக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் வரை இந்த போராட்டத்தில் இணைந்திருந்தனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் போலிஸார் குறித்த வாகனத்தை மன்னார் நகருக்குள் கொண்டு செல்ல முயற்சித்த போதும் மக்களின் பலத்த எதிர்ப்பினால் இந்த வாகனம் கொண்டு செல்ல முடியவில்லை .

இந்த நிலையில் குறித்த காற்றாலைக்கான உதிரி பாகங்களை ஏற்றிவந்த வாகனம் சுமார் 50க்கும் மேற்பட்ட பொலிஸாரின் பாதுகாப்புடன் மன்னார் நீதிமன்ற பிரதான வாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here