இன்றைய வானிலை

55
0
Spread the love

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களில் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும், பிற்பகல் 2:00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மாகாணங்கள், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ. வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசக்கூடும்என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here