கொழும்பு- மட்டக்களப்பு வீதியில் கோர விபத்து – 27 பேர் காயம்

74
0
Spread the love

கொழும்பு- மட்டக்களப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 27 பேர் காயமடைந்துள்ளனர்.

மின்னேரியாவின் பட்டுஓய பகுதியில் இன்று (12.08) அதிகாலை விபத்து இடம்பெற்றுள்ளது.

மாதுரு ஓயாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ் முன்னால் சென்ற லொறி  மீது மோதியதால் விபத்து சம்பவித்துள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் பொலன்னறுவை, மின்னேரியா மற்றும் ஹிங்குராங்கொட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் விபத்து தொடர்பாக மின்னேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here