முதல் 10 நாட்களில் இவ்வளவு சுற்றுலாப் பயணிகளா?

108
0
Spread the love

நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்த மாதத்தின் கடந்த 10 நாட்களில், 77 ஆயிரத்து 482 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

அத்துடன் பிரித்தானியா, இத்தாலி, சீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்தும் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.

இதற்கமைய இந்த வருடத்தில் நாட்டிற்கு வருகைதந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 14 லட்சத்து 45 ஆயிரத்து 770 ஆக அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here