கிளிநொச்சியில் வீடொன்றிற்கு புகுந்த சிலரால் உடைமைகள் சேதம்

107
0
Spread the love

கிளிநொச்சி, பளை – சோறன்பற்று பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த குழுவினர் உடமைகளை சேதமாக்கியுள்ளனர்.

மோட்டார்சைக்கிளில் பயணித்தவர்களால் நேற்றிரவு இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் முகங்களை மூடியவாறு வாள், கத்திகள் மற்றும் பெற்றோல் குண்டுகளுடன் வீட்டிற்குள் புகுந்துள்ளனர்.

குறித்த நபர்கள் வீட்டிலிருந்த தளபாடங்களை சேதப்படுத்திய போது, வீட்டு உரிமையாளர் கூச்சலிட்டுள்ளார்

இதன்போது சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சி.சி.ரி.வி காணொளிகளின் உதவியுடன் சந்தேகநபர்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here