மன்னார் காற்றாலை திட்டத்திற்கு எதிராக 13 ஆவது நாளாகவும் போராட்டம் ( Video)

72
0
Spread the love

மன்னார் மாவட்டத்தில் இடம் பெறும் காற்றாலை மின் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு உள்ளிட்ட செயற்திட்டங்கள் தொடர்பில் உறுதியான தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்து 13 ஆவது நாளாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (15.08) போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

மன்னார் நகர பிரதான சுற்றுவட்ட பகுதியில் 13 வது நாளாக மக்களினால் குறித்த போராட்டம் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் இடம் பெற்று வருகிறது.

இதன்போது குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மன்னார் முஸ்லிம் மக்களும் கலந்து கொண்டனர்.

ஜும்மா தொழுகை நிறைவடைந்த நிலையில்,முஸ்லிம் மக்கள் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு குறித்த போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் தமது ஆதரவை வழங்கியுள்ளனர். அண்மையில் இடம் பெற்ற ஜனாதிபதியுடனான சந்திப்பில் காற்றாலை செயற்திட்டங்களை ஒரு மாத காலம் நிறுத்தி வைப்பதாக ஜனாதிபதியினால் வாக்குறுதி வழங்கப்பட்ட போதிலும் உறுதியான முடிவு வரும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என போராட்டகாரர்கள் தெரிவித்துள்ள நிலையில் இன்றைய தினம் போராட்டம் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.