மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரபுர கெமுனு ஏரியில் நேற்று (15.08) மதியம் 12 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
கரிகட்டிய பகுதியைச் சேர்ந்த சிறுவன், தனது மாமியுடன் குளத்தில் நீராடிக் கொண்டிருந்தபோது இவ்வாறு த நீரில் மூழ்கியுள்ளார்.
குறித்த சிறுவன் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, ஏற்கனவே உயிரிழந்திருந்ததை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







