கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க கடற்படைக் கப்பல்

72
0
Spread the love

அமெரிக்க கடற்படைக் கப்பலான ‘USS செண்டா பார்பரா’ அதன் விநியோக மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தை இன்று சனிக்கிழமை (16.08) காலை வந்தடைந்த இந்தக் கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் சம்பிரதாயபூர்வமான வரவேற்பை அளித்தனர்.

இந்த கப்பல் 127.6 மீற்றர் நீளம் கொண்டதுடன் குறித்த கப்பலின் தளபதியாக A.J.OCHS செயற்படுகின்றார்.

‘USS செண்டா பார்பரா’ கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அதன் குழுவினர் இலங்கையின் முக்கிய இடங்களை பார்வையிடவுள்ளனர்.

குறித்த கப்பல் எதிர்வரும் ஓகஸ்ட் 22 ஆம் திகதி நாட்டில் இருந்து புறப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here