பாதாள உலக குழு நடவடிக்கைகளை கட்டுப்படுத்த விசேட திட்டம்

60
0
Spread the love

பாதாள உலக குழு நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு தற்போதுள்ள திட்டத்தை விடவும் விசேட திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.

கண்டியில் மகாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர் இன்று (17.08) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

”முப்படைகள் மற்றும் பொதுமக்களின் ஆதரவுடன் குற்றச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு
பணியாற்றி வருகிறோம்

சட்டத்தை நிலைநாட்டுவதில் எந்த அரசியல் செல்வாக்கும் இல்லை , அரசியல் சூழல் மிகவும் நன்றாக உள்ளது.

எந்தவொரு குற்றத்தையும் மறைக்கவோ அல்லது புறக்கணிக்கவோ தன்னிடமிருந்து ஒருபோதும் உத்தரவுகள் கிடைக்காது.

துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாக, சந்தேக நபர்களை விசாரித்து கைது செய்துள்ளோம்.
மேலும் நாங்கள் மிகவும் நுட்பமான திட்டத்துடன் முன்னேறி வருகிறோம்.

போதைப்பொருள் கடத்தல் நேற்று இன்று நடக்கவில்லை, அதேபோன்று பாதாள உலகக் குழு நடவடிக்கைகளும் நேற்று ஆரம்பமானதல்ல

அதற்காக சில அரசியல் சக்திகள் செயற்பட்டுள்ளன. பொலிஸார் மற்றும் அதிகாரிகளிடமிருந்து ஆதரவு பெறப்பட்டுள்ளன.
முப்படைகளைச் சேர்ந்தவர்களும் இதற்குப் பயன்படுத்தப்பட்டனர், போதைக்கு அடிமையானவர்களும் இதற்குப் பயன்படுத்தப்பட்டனர்.

எனவே இந்த நடவடிக்கைகள் வெளிநாடுகளுக்குச் சென்ற குழுவால் மேற்கொள்ளப்படுகின்றன இந்நிலையில் சர்வதேச சமூகத்துடன் இணைந்து நாங்கள் பணியாற்றி வருகிறோம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here