வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
ஓமந்தை ஏ9 வீதியில் இன்று இரவு (17.08) விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது 13 பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கண்டியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த பொலிரோ ரக வாகனம் ஏ9 வீதியின் ஓமந்தை மாணிக்கர் வளவுப்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது பார ஊர்தியில் மோதி கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டுள்ளது.
விபத்தின் போது குறித்த வாகனத்தில் பெண்கள் சிறுவர்கள் உட்பட 15ற்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் 9 பேர் பெண்கள் என்பதுடன் ஆறு பேர் சிறுவர்கள்.
இதேவேளை படுகாயமடைந்த சிறுவன் ஒருவன் உட்பட மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விபத்து தொர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.







