நல்லூரில் இன்று மாலை தங்க இரத உற்சவம்

132
0
Spread the love

நல்லூர் வருடாந்த மகோற்சவத்தில் இன்று முதல் (18.08) எதிர்வரும் ஐந்து நாட்கள் விசேட உற்சவங்கள் இடம்பெறவுள்ளன.

இதன்படி மகோற்சவத்தின் 21 ஆம் நாளான இன்று (18.08) கஜவல்லி மகாவல்லி உற்சவம் நடைபெற்றது.

இன்று காலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து, தங்க அன்ன வாகனத்தில் கஜவல்லி மகாவல்லி எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.

இதனையடுத்து இன்று மாலை தங்க இரத உற்சவம் இடம்பெறவுள்ளது.

அத்துடன் நாளை காலை மாம்பழத் திருவிழாவும், மாலை வேளையில் ஒருமுக திருவிழாவும் நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here