பாலைப்பாணி கிராமத்தில்  சடலமாக மீட்கப்பட்ட பெண்

81
0
Spread the love

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட பாலைப்பாணி கிராமத்தில் தனிமையில் வசித்து வந்த வயோதிப பெண் ஒருவர் வீட்டில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்குப் பிரதேச செயலாளர் பிரிவின் பாலைப்பாணி கிராமத்தில் தனிமையில் வசித்து வந்த  70 வயதுடைய மூதாட்டி வீட்டில் சடலமாகக் கிடப்பதாகக் கிராமத்தவர்களால் நேற்று (22.08) மாலை மாங்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இந்நிலையில் சம்பவ இடத்துக்குச் சென்ற மாங்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு இன்று காலை கிளிநொச்சி தடயவியல் பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சடலத்தை நீதிபதி பார்வையிட்டதன் பின்னர் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

மூதாட்டியிடமிருந்து நகைஉள்ளிட்ட பொருட்களைக் களவாட வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படும் நிலையில் மாங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here