தேசபந்துவுக்கு பிணை

157
0
Spread the love

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவை பிறப்பித்தார்.

அதன்படி, சந்தேகநபர் தேசபந்து தென்னகோனை தலா ஒரு மில்லியன் ரூபாய் படி இரண்டு சரீர பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், சந்தேகநபர் வெளிநாடு செல்வதற்கும் தடை விதித்தார்.

2022 ஆம் ஆண்டு காலி முகத்திடலில் நடந்த ‘கோட்டா கோ கமா’ போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here