முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல் நிலை தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர், வைத்தியர் ருக்ஷான் பெல்லனவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகப் பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
நோயாளர்களின் உடல் நிலைமை மற்றும் அவற்றுடன் தொடர்புடைய தகவல்களை பொதுவாக ஊடகங்களுக்கு வழங்குவதில்லை என அவர் கூறியுள்ளார்.
அவ்வாறு செயற்படுவதில் ஒழுக்கம் மற்றும் சட்ட ரீதியான சிக்கல்கள் காணப்படுவதாகவும் பிரதிச் சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே, இவ்வாறான செயற்பாடு ஒழுக்க விதிமுறைகளை மீறும் செயற்பாடு எனவும் சுகாதாரப் பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி மேலும் தெரிவித்துள்ளார்.







