IPL இல் இருந்து ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவிப்பு

117
0
Spread the love

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பை அவர் தனது சமூக ஊடக கணக்குகளில் பதிவிட்டுள்ளார்.

ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய தொடக்கத்தைக் கொண்டிருக்கும் என தெரிவித்த அஸ்வின் ஐ.பி.எல். கிரிக்கெட் வீரராக தனது பயணம் இன்று நிறைவடைகிறது என பதிவிட்டுள்ளார்.

பல ஆண்டுகளாக அனைத்து அற்புதமான நினைவுகளுக்கும் உறவுகளுக்கும் நன்றி எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் சகல உரிமையாளர்களுக்கும் குறிப்பாக ஐ.பி.எல். மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கும் என் நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். என அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.

38 வயதான அஸ்வின் இதுவரை 5 அணிகளில் ஐ.பி.எல். தொடரில் பங்குபற்றியுள்ளார். இறுதியாக சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் விளையாடினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here