கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் நடைபெற்ற போராட்டத்தின் போது, பொலிஸ் அதிகாரி ஒருவரைக் காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 26 ஆம் திகதி பணியில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரைப் போத்தலால் தாக்கிக் காயம் ஏற்படுத்திப் பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் சந்தேகநபர் களுத்துறையில் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் நேற்று (27.08) கைது செய்யப்பட்டு கொம்பனித் தெரு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் நாகொடை, களுத்துறை பகுதியைச் சேர்ந்த 52 வயதான முன்னாள் நகர சபை உறுப்பினர் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் இன்று (28.08) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
கொம்பனித் தெரு பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.






