கிளிநொச்சியில் கோர விபத்து – இளைஞர்கள் இருவர் பலி

170
0
Spread the love

கிளிநொச்சி ஏ-09 வீதியின் பரந்தன் விவசாயப் பண்ணைக்கும் கரடிப்போக்கு சந்திக்கும் அன்மித்த பகுதியல்  இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து இன்று (29.08) அதிகாலை கண்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான  பேருந்து ஒன்றுடன் பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தையடுத்து அதே திசையில் பின்னால் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here