ஆப்கானிஸ்தானை புரட்டிப் போட்ட நிலஅதிர்வு – 622 பேர் பலி

115
0
Spread the love

கிழக்கு ஆப்கானிஸ்தானில் இன்று திங்கட்கிழமை பதிவான சக்தி வாய்ந்த நிலஅதிர்வு காரணமாக 622 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 1,500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலஅதிர்வு இன்று அதிகாலை 12.57 க்கு 6.0 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

ஜலாலாபாத்தில் இருந்து கிழக்கு-வடகிழக்கே 27 கிலோமீட்டர் தொலைவில், 8 கிலோமீட்டர் ஆழத்தில் நிலஅதிர்வு மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 20 நிமிடங்களுக்கு பின்னர் மீண்டும் மற்றொரு நில நடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நிலஅதிர்வு 10 கிலோ மீற்றர் ஆழத்தில் 4.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதாகவும், இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அந்நாட்டு அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here