தங்கத்தின் விலை இன்று 6000 ரூபாவால் அதிகரிப்பு

235
0
Spread the love

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இன்று தங்கம் பவுண் ஒன்றிற்கு 6000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை 274,000 ரூபாயாக இருந்த 24 கரட் தங்க பவுண் ஒன்று, இன்றைய தினம் 280,000 ரூபாவாக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (01.08) தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 280,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 259,000 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here