மகளிர் உலகக் கிண்ணம்- பிரம்மாண்ட பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி

196
0
Spread the love

எதிர்வரும் மகளிர் ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பரிசுத் தொகையை 13.88 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்த்தியுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

இது 2022ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற முந்தைய ஒருநாள் உலகக் கிண்ண தொடரை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி கிண்ணத்தை வெல்லும் அணிக்கு 4.48 மில்லியன் அமெரிக்க டொலரும், இரண்டாம் இடத்தை பிடிக்கும் அணிக்கு 2.24 மில்லியன் அமெரிக்க டொலரும் வழங்கப்படவுள்ளது.

அத்துடன் அரையிறுதியில் தோல்வியடையும் அணிகளுக்கு தலா 1.12 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வரலாற்றுச் சிறப்புமிக்க கிரிக்கெட் தொடர் எதிர்வரும் செப்டெம்பர் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை மற்றும் இந்திய மகளிர் அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here