எல்ல – வெல்லவாய பிரதான வீதியின் 15 ஆவது மைல்கல்லுக்கு அருகில், பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளதோடு மேலும் பலர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பேருந்து நேற்றைய தினம் (04.09) வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் சுமார் 300 –
அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதாகவும், பேருந்தில், தங்காலை நகர சபையின் ஊழியர்கள் பயணித்ததாகவும் கூறப்படுகின்றது.
விபத்தின்போது பஸ்ஸில் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்தில் இராணுவம் மற்றும் உள்ளூர் மக்களுடன் இணைந்து
பண்டாரவளை மற்றும் எல்ல பொலிசார் தீவிர மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
விபத்து நடந்த பகுதியில் வாகனங்கள் செல்லமுடியாத அளவிற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளமையால்
பொதுமக்கள் யாரும் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட வர வேண்டாம் என பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.








