எல்ல பேருந்து விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆகஉயர்வு காயமடைந்தவர்களில் சிலரது நிலமையும் கவலைக்கிடம்

178
0
Spread the love

எல்ல பகுதியில் நேற்று இரவு இடம் பெற்ற பேருந்து விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆகவும் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று(04.09) இரவு சுமார் 9 மணியளவில், வெல்லவாய நோக்கிச் சென்ற பேருந்து, எல்ல பொலிஸ் பிரிவில் 23வது மற்றும் 24வது கிலோமீட்டர் தூண்களுக்கு இடையிலான வீதியில் எதிரே வந்த ஜீப் மற்றும் பாதுகாப்பு இரும்பு வேலியில் மோதி 1000 அடி பள்ளத்தில் விழுந்தது.

விபத்தில் சிக்கிய பேருந்தின் சாரதியுடன் 30 பயணிகள் இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விபத்தில் பேருந்தின் சாரதி உட்பட 06 ஆண்கள் மற்றும் 09 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 05ஆண்கள்,  06, பெண்கள், 03 சிறுவர்கள் மற்றும் 02 சிறுமிகள் சிகிச்சைக்காக பதுளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்க உதவிய இருவரும் காயமடைந்து சிகிச்சைக்காக பதுளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here