ரஷ்யாவில் சக்திவாய்ந்த நில அதிர்வு

187
0
Spread the love

ரஷ்யாவின் கம்சட்கா பிராந்தியத்தில் சக்தி வாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.

ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்குப் பகுதியில் இன்று
சனிக்கிழமை (13.09) குறித்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறித்த நில அதிர்வு 7.4 ரிக்டர் அளவில் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 39.5 கிலோமீற்றர் ஆழத்தில் இந் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அருகிலுள்ள சில ரஷ்ய கடற்கரைகளில் ஒரு மீற்றர் (3.3 அடி) வரை ஆபத்தான அலைகள் ஏற்படக் கூடும் என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்திருந்த நிலையில், பின்னர்  சுனாமி அச்சுறுத்தல் இல்லயென அறிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here